Monday, February 4, 2013

இந்தி- ஒரே நாள் வசூலில் ரஜினியின் ரோபோவை முந்திய 'விஸ்வரூப்'



வட இந்தியாவில் ரிலீஸான முதல் நாள் வசூலில் கமலின் விஸ்வரூப் ரஜினிகாந்தின் ரோபாவை முந்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், ஏன் பிற நாடுகளிலும் ஹிட்டாகும். அவர் அந்தளவுக்கு பிரபலம். அவர் என்ன தான் மசாலா படத்தில் நடித்தாலும் அது ஓடிவிடும். அதற்கு நேர் எதிர் அவரின் நண்பர் கமல் ஹாசன். படத்திற்கு படம் வித்தியாசம், புதுமை காட்ட விரும்புபவர். அதனால் அவருடைய அத்தனை படங்களும் ஓடும் என்று சொல்லிவிட முடியாது.

இந்நிலையில் தான் விஸ்வரூபம் படத்தை தானே தயாரித்து இயக்கினார். படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளது என்று கூறி தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசும் படத்திற்கு 2 வார தடை விதித்தது. தற்போது தான் ஒரு வழியாக பிரச்சனைகள் தீர்ந்துள்ளது.

இதையடுத்து வரும் 8ம் தேதி படம் தமிழகத்தில் ரிலீஸாகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே படம் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி மாதம் 1ம் தேதி விஸ்வரூபம் இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் வெளியானது.

தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவால் படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதைப் பார்த்துவிடும் ஆர்வம் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. அதனால் விஸ்வரூப் ரிலீஸான அன்று வடநாட்டு தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழக அரசின் தடை படத்திற்கு ஒரு வகையில் நல்லதாகிவிட்டது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் இந்தியில் ரோபோ என்ற பெயரில் வெளியானது. படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 1.75 கோடி வசூல் செய்தது. ஆனால் விஸ்வரூப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1.89 கோடி. இதன் மூலம் விஸ்வரூப் ரோபோவை முந்திவிட்டது. 

For More Information Please Visit : Cinema News | Tamil Movies | Kollyword Kisu Kisu 

Saturday, February 2, 2013

கமலின் பேட்டியால் எனது இதயத்தில் ரத்தம் கசிந்தது! தனுஷ் உருக்கம்






கமலுக்கு எழுந்துள்ள விஸ்வரூபம் பட பிரச்னைக்கு திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷூம் தன் பங்கிற்கு உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.



அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியவர் கமல். அருக்கே இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாகி இருக்கிறது என்று எண்ணும்போது கஷ்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டை விட்டே அவர் போகிறேன் என்று அவர் சொன்னதும் என் இதயத்தில் ரத்தம் கசிந்தது என்று கூறியுள்ளார்.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பேசும்போது, இது மிகவும் துரதிர்ஷ்டமானது. சினிமாவுக்காக வாழ்பவர் கமல். அவரது பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். எங்கள் ஆதரவு அவருக்கு உண்டு என்றார்.

For More information Please Visit :Cinema News |  Tamil Movies |  Kollyword Kisu Kisu